Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 The cultural diversity of Australia’s Anzacs | File Type: audio/mpeg | Duration: Unknown

Each year on the 25th of April we mark Anzac Day when we remember those who served and died in armed conflict. Anzac Day has become a symbol of Australias national identity. Anzacs means the soldiers of the Australian and New Zealand Arm... (ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் திகதி ANZAC தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டிற்காக போரில் ஈடுபட்டு மரணித்த வீரர்களை நினைவு கூறும் தினம் ANZAC தினமாகும். ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளமாக ANZAC தினம் விளங்குகிறது. ANZAC படையில் பல்லின பல்கலாச்சார பின்னணி கொண்ட வீரர்கள் கடமையாற்றியுள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Focus : Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled events/news in North & East / Sri Lanka. (இலங்கையில் தடுமாறும் தலைமைகளினால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள் - அடுத்தது என்ன? தற்போதைய அரசியல் நிலைமை குறித்து வவுனியாவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்  )

 457 Visa: What are the impacts on business and individuals? | File Type: audio/mpeg | Duration: Unknown

In Australia, the 457 visa is the most common visa for Australian or overseas employers to sponsor skilled overseas workers to work temporarily in Australia. Many believe it brought people with innovation, economic growth, corporate and university... (457 விசா ரத்து செய்யப்படுவதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த விசா நாட்டுக்கு பல நன்மைகளைக் கொண்டுவந்தததாக பலர் வாதிடுகின்றனர். ஆனால் இந்த விசா ஆஸ்திரேலிய மக்களுக்கு நியாமாக கிடைக்கவேண்டிய வேலைகளைப் பறிக்கிறது, விசா மோசடி நடக்கிறது என்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் என்ன சொல்கின்றனர்? 457 விசாவில் பணியாற்றும் முருக விஜய் நோபல், சமூகத் தலைவர்களில் ஒருவரும், குடிவரவு முகவருமான திரு ஆறுமுகம், விருது பெற்ற தொழிதிபரும் 457 விசாவில் பணியாளர்களை வேலைக்கமர்த்துகின்றவருமான மோகன் சுந்தர் ஆகியோர் இது குறித்து அலசுகின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  )

 India's finest critic is criticised.... | File Type: audio/mpeg | Duration: Unknown

Govind Dhananjayan, popularly known as GD, has been awarded the Best Film Critic at the 64th National Film Awards, India. Many of his articles and criticisms in Tamil and English on the Indian film industry have attracted national attention in In... (இந்தியாவில், 2016 ஆம் ஆண்டின் தலை சிறந்த திரை விமர்சகர் எனும் விருது பெறுகிறார், GD என்று பிரபலமாக அறியப்படும் கோவிந்த் தனஞ்சயன். தமிழ்த் திரையுலகு குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளும் விமர்சனங்களும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. திரைப்படங்கள் மேல் அவருக்குள்ள ஆர்வம் காரணமாக, BOFTA என்ற திரைப்படக்கல்லூரியையும் நிறுவியுள்ள கோவிந்த் தனஞ்சயன், மனம் திறந்து, குலசேகரம் சஞ்சயனுடன் தன் கருத்துகளைப் பகிர்கிறார்.  )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 23 April 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (23 ஏப்ரல் 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல். )

 Thamil Thadam: Noboru Karashima | File Type: audio/mpeg | Duration: Unknown

Noboru Karashima (24 April 1933 - 26 November 2015) was a Japanese historian and writer. He was a prominent scholar of Asia in the studies of South Indian and South Asian histories and immensely contributed to the Dravidian or Tamil history. Dhamu... (தமிழ்க் கலாச்சாரத்தின் பெருமையை ஜப்பானில் மட்டுமல்ல சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரப்பியவர், பேராசிரியர் நொபுரு காரஷிமா. இவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் தாமு அவர்கள்.  )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.   (தமிழ்நாட்டின் வைகை அணையின் நீர்மட்டத்தை தெர்மோகோல் அட்டைகளால் மூடி, நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அமைச்சரின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகிவருகிறது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 12/04/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on Wednesday 12 April 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (12 April 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 The Wellness Farm of Mr & Mrs Varatharaj | File Type: audio/mpeg | Duration: Unknown

K M Varadharaj, 70, an agriculture graduate growing organic grape for the past 30 years, and his wife Jaya, 68, a home science graduate, who run the medical farm talk to Kulasegaram Sanchayan about graviola plant, also called soursop or mullu seet... (எழுபது வயதான K M வரதராஜும் அவர் துணைவியார் ஜயா அவர்களும் புற்றுநோய்க்குத் தீர்வாக, நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தாவரங்களை ஒரு பண்ணையில் வளர்த்து வருகிறார்கள். இதுவரை, சுமார் ஆயிரம் பேர் இதனால் பயனடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இது குறித்து குலசேகரம் சஞ்சயன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார். முள் சீத்தாப்பழம் அல்லது அன்னமுன்னா பழத்தில் புற்றுநோயைத் தீர்க்கும் சக்தி இருக்கிறதா அன்பது குறித்த தனது கருத்துகளையும் பதிந்திருக்கிறார், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் பிரணவன் கணேசலிங்கம்.  )

 MGR Centenary special series – Part 13 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the twelfth part of the program. Voice: Nanthivarman & Indumathy. Script: S.Suntheradas Production: RaySel... (சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். எம்ஜிஆரின் அரசியல் வெற்றி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள் குறித்தும் விளக்குகிறார் சுந்தரதாஸ் அவர்கள். இந்த தொடரின் பதிமூன்றாம் பாகம் இது. எழுத்து: சுந்தரதாஸ் குரல்கள்: நந்திவர்மன் மற்றும் இந்துமதி. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  )

 Doubt over offshore detention centres as contracts near end | File Type: audio/mpeg | Duration: Unknown

There are new questions over the future of Australia's offshore immigration detention centres. The private company which operates the centres in Papua New Guinea and Nauru has announced its plans to leave by the end of October. The government ... (புகலிடக் கோரிக்கையாளர்களின் கடல்கடந்த தடுப்பு முகாம்களான நவுரு, மானுஸ் ஆகியவற்றை நிறுவகித்துவந்த நிறுவனத்தின் குத்தகை இவ்வருட அக்டோபர் மாத இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. சர்ச்சைக்குரிய அந்த நிறுவனமும் வெளியேறப்போவதாக உறுதி செய்துள்ளது. அப்படியானால் அம்முகாம்களின் எதிர்காலம் என்னவாகும்? Jarni Blakkarly தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 The work of Australian Medical Aid Foundation | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian Medical Aid Foundation is a non-political, non-religious and not for profit organisation. It is providing medical aid to war ravaged region in Sri Lanka. Dr Raj Pathmaraj, President of Victorian branch of Australian Medical Aid Foundati... (Australian Medical Aid Foundation என்பது போரினால் பாதிக்கப்பட இலங்கை மக்களுக்கு மருத்துவ உதவி செய்துவரும் அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் அதன் பணிகளும் சேவையும் விரிந்துகொண்டே செல்கின்றன. கடந்த ஆண்டு Australian Medical Aid Foundation என்ன பணிகளைச் செய்தது என்று விளக்குகிறார் Australian Medical Aid Foundation அமைப்பின் விக்டோரியா மாநிலத் தலைவர் மருத்துவர் ராஜ் பத்மராஜ் அவர்கள்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.  )

 Australian News 10.04.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 10th April 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 10 ஏப்ரல் 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி. )

 India....Black or White Nation ? | File Type: audio/mpeg | Duration: Unknown

Two Nigerian students were assaulted in India two weeks ago. It has become a hot topic of discussion at various international media. During one such discussion on an international media, former BJP MP Tarun Vijay made a comment that has made alm... (இந்தியாவில் சில வாரங்களுக்கு முன், நைஜீரிய மாணவர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை நேயர்கள் அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவம் குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் விவாதங்களை நடத்தி வருகின்றன. அப்படி ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் BJP நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கூறிய கருத்து பல எதிப்பலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து, தருண் விஜய், சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான முத்து கிருஷ்ணன், எவிடென்ஸ் என்ற பெயரில் மதுரையில் தன்னார்வ அமைப்பினை நடத்தி வரும் எவிடென்ஸ் கதிர், பன்முகத் திறனுள்ள ஞாநி ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.  )

Comments

Login or signup comment.