Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Voxpop on 2017 Budget | File Type: audio/mpeg | Duration: Unknown

Treasury Scott Morrison presented the 2017 Budget at the parliament last night. Kulasegaram Sanchayan solicites our listeners take on the new budget. Featured in this segment are: Susai Armstrong, Bala Suthersan, Kanthimathi Dinakaran, Ponaraj... (கருவூலக்காப்பாளர் Scot Morrison நேற்று மாலை 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த, ஆஸ்திரேலிய வரவு செலவுத் திட்டம் குறித்து எமது நேயர்கள் சிலரது கருத்துகளைப் பதிகிறார், குலசேகரம் சஞ்சயன். கருத்துக் கூறிய நேயர்கள்: சூசை ஆர்ம்ஸ்றோங், பாலா சுதர்சன், காந்திமதி தினகரன், பொன்ராஜ் தங்கமணி, ஜனகன் சிவராமலிங்கம், சத்யா சிவா கைலாசம்.  )

 Has the Coalition delivered a "Labor" budget? | File Type: audio/mpeg | Duration: Unknown

They say imitation is the most sincere form of flattery. But Opposition leader Bill Shorten is strongly rejecting the claim Scott Morrison's Budget looks like something a Labor treasurer might have written. As the Coalition works on selling its ec... (நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நாட்டின் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்த ஒரு ஆய்வு. அலசுகிறார் Griffith பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் இ.செல்வநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 03/05/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on Wednesday 03 May 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (03 May 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 MGR Centenary special series – Part 16 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the final (16) part of the program. Voice: Nanthivarman & Indumathy. Script: S.Suntheradas Production: RaySel

 Patients may be pushed to use ‘generic drugs’ | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian Government is about to introduce changes that will see prescription software altered so that the cheaper generic version of a medicine is prescribed for patients by default. Kulasegaram Sanchayan talks to Dr Thava Seelan, a long-term... (எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்போது, சுகாதாரத்துறையில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு Branded (அல்லது பெயர் குறிக்கப்பட்ட) மருந்தைப் பரிந்துரைப்பதைவிட, Generic அல்லது பொதுவான மருந்தைத் தான் பரிந்துரைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்கப்படலாம் என எதிர்பார்க்க்கப்படுகிறது.   இது குறித்து, சிட்னியில் பல வருடங்களாகக் குடும்ப மருத்துவராகாக் கடமையாற்றும் Dr தவ சீலன் மற்றும் தொழில் முறையில் Pharmaceutical Chemistயாக பணியாற்றிய அன்பு ஜெயா அவர்களிடமும் கருத்துக் கேட்டு நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.  )

 Easy retirement floating further away for many | File Type: audio/mpeg | Duration: Unknown

The dream of a comfortable retirement may be moving further out of reach for many Australians. A new report highlighting the financial pressures on working Australians over age 50 shows nearly half expect to retire with debts. Maheswar... (ஒரு நிம்மதியான, வசதியான ஓய்வூதிய வாழ்க்கை அமைய வேண்டுமென்பதே வயோதிபத்தை நோக்கிச் செல்வோரின் கனவாக இருக்கும். ஆனால் அப்படியான ஒரு நிலைமை அநேகருக்கு ........ Brianna Roberts தயாரித்த செய்தி விவரணம் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Global Seed Vault: A simple explanation | File Type: audio/mpeg | Duration: Unknown

More than 100 metres into a frozen sandstone mountain near the North Pole is a bank that holds an insurance policy for the survival of the human race. Historically important documents and literature could be preserved for hundreds of years in a ne... (உலகில் மனித குலமே அழிந்துவிட்டது. எஞ்சியோர் சிலரே. எப்படி இந்த உலகம் இனி கட்டி எழுப்பப்படும்? தாவர வகைகள் மீண்டும் எழுமா? மனித கண்டுபிடிப்ப்புகள் இருக்குமா? என்ன நடக்கும்? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.  )

 Australian News 01.05.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 1st May 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 01 மே 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி. )

 "No surprise that I fell for his voice" | File Type: audio/mpeg | Duration: Unknown

Kalaimamani Dr. Pushpavam Kuppusamy and Anita Kuppusamy are known for popularising folk songs. They will be performing at Chithirai Thiruvizha in Sydney, Australia.. Anitha Kuppusamy shares her experiences with Kulasegaram Sanchayan.. A... (கிராமியப் பாடல்களை மண்மணம் மாறாமல் நம்மிடையே கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் பலமேடைகளில் பாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.. அனிதா குப்புசாமி அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.. இவ்வாண்டின் சித்திரைத் திருவிழாவில் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன.. நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 07ம் நாள்.. நேரம் : காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை.. இடம் : Rose Hill Gardens (ரோஸ் ஹில்  )

 Imposing Hindi on non-Hindi states? | File Type: audio/mpeg | Duration: Unknown

The Parliamentary Committee on Official Language in India had given 117 recommendations that include people occupying high political offices may be requested to give speeches in Hindi. Aazhi.Senthil Nathan, Secretary of Campaign for Language Equal... (இந்தியாவில் ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு என்கிற மத்திய அரசுக் குழுவின் பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் பரிந்துரைகள் இந்தி மொழி பேசாத மாநிலத்தில் வாழும் மக்களின் வேலைவாய்ப்பு, கல்வி, மொழி உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல் என்று வாதிடுகிறார் மொழிநிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கத்தின் (Campaign for Language Equality and Rights, CLEAR) அனைத்திந்தியச் செயலர் ஆழி செந்தில்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 Heart disease is the leading cause of death in Australia | File Type: audio/mpeg | Duration: Unknown

Heart disease is the leading cause of death in Australia.   On average, one Australian dies every 12 minutes as a result of a cardio vascular disease.   When it comes to heart attacks, one Australian dies almost e... (மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஏனெனில் மாரடைப்பு ஏற்படும் போதும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். ஏப்ரல் 30ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு இதய நலன் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கை மன்னாரில் 38 நாட்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக படையினர் 100 ஏக்கர் காணி விடுவிப்பு செய்துள்ளனர் மற்றும் ஊடகவியலாளர் சிவராமின் 12வது ஆண்டு நினைவு நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்றுள்ளன . இவைகள் குறித்த விரிவான விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.  )

 I will never sing a song that degrades my culture | File Type: audio/mpeg | Duration: Unknown

Kalaimamani Dr. Pushpavam Kuppusamy and Anita Kuppusamy are known for popularising folk songs. They will be performing at Chithirai Thiruvizha in Sydney, Australia. Kalaimamani Dr. Pushpavanam Kuppusamy shares his experiences with Kulasegaram ... (தாலாட்டு, கும்மி, நடவு, தெம்மாங்கு போன்ற கிராமிய பாடல்கள், கிராமத்தில் வாழும் மக்களின் படைப்பாற்றலையும், சிந்தனைகளையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கக்கூடியன, மக்களின் அன்றாட வாழ்வைப் பாட்டாகத் தருவன. கிராமியப் பாடல்களை மண்மணம் மாறாமல் நம்மிடையே கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் பலமேடைகளில் பாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் தனது அனுபவங்க்களைப் பகிர்ந்து கொள்கிறார். இவ்வாண்டின் சித்திரைத் திருவிழாவில் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 07ம் நாள் நேரம் : காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை இடம் : Rose Hill Gardens (ரோஸ் ஹில் கார்டன்ஸ்), James Ruse Drive, Rosehill, NSW 2142.  )

 Changes in Australian Citizenship | File Type: audio/mpeg | Duration: Unknown

The Australian Government has announced sweeping changes to the nation's citizenship laws, with Prime Minister Malcolm Turnbull declaring that new arrivals must prize "Australian values" and prove their commitment to the nation. Is the change of p... (ஆஸ்திரேலிய குடிமகன் அல்லது குடிமகள் ஆவதில் புதிய விதிமுறைகளை அரசு அறிமுகம் செய்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுவர் என்கின்றனர் சிலர்; ஆனால் இந்த மாற்றம் தேவை என்கின்றனர் சிலர். இவர்கள் என்ன நினைக்கின்றனர்? வழக்கறிஞரும், குடிவரவு முகவருமான முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் அப்பாஸ், அகதி பின்னணி கொண்டவரும் தற்போது குடியுரிமை பெற காத்திருப்பவருமான குமார், ஆஸ்திரேலியாவுக்கு குடியேறி தற்போது குடியுரிமை பெற விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கும் பொன்ராஜ் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  )

Comments

Login or signup comment.